வேலூரில் 3 நாட்களில் மகளின் திருமணத்தை காண இருந்த விவசாயி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமார் வேலூர் சந்தைக்கு தனது மோட்டார்சைக்கிள் வாகனத்தில் சென்று விட்டு பின் அங்கு பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்பியுள்ளார். இவருடன் அவரது உறவினரான நவீன்குமார் உடன் சென்றிருந்தார்.
வீடு திரும்பும் வேளையில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தை வேகமாக நீக்கியுள்ளார் ராஜ்குமார். அப்போது அப்துல்லாபுரத்தையடுத்த இளவம்பாடி பகுதியில் வரும் வளைவில் வேகமாக திரும்பியபோது புளியமேடு கிராமத்தைச் சேர்ந்த சைக்கிளில் வந்துகொண்டிருந்த விவசாயி வில்வநாதன் மீது மோதினார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாகனம் அதோடு நிற்காமல் நேராக புளிய மரத்தின் மீது மோதியது.
இதில் ராணுவ வீரர் ராஜ்குமார் மற்றும் வில்வநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, நவீன்குமார் படுகாயமடைந்தார். பின் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த விவசாயி வில்வநாதன் அவரது மகளுக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது இந்த சமயத்தில் அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.