Categories
மாநில செய்திகள்

“மறுமணம் செய்துகொள்” வற்புறுத்திய தாயை இரும்புக்கம்பியால் அடித்து கொன்ற மகள்….!!

டெல்லியில் மறுமணம் செய்து கொள் என்று தாய் வற்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கி மகளே  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மின்சார வாரியத்தின் அலுவலராக பணியாற்றி வருகிறார் நீரு  இவர் தனது கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பிரிந்து தனது தாய் சந்தோஷ் பஹாவுடன் வசித்து வாழ தொடங்கினார். ஆனால் கணவனை பிரிந்து வந்தது தாய் சந்தோஷ் பஹாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை தினந்தோறும் திட்டிக்கொண்டே இருப்பார் சந்தோஷ பஹா மேலும் மறுமணம் செய்துகொள்ளுமாறு அவ்வபோது வற்புறுத்துவார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது பெரிய சண்டைகள் உருவாகும்.

Image result for இரும்பு கம்பியால் அடித்து கொலை

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இருவருக்கும் இதுகுறித்து வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நீரூ பஹா இரும்பு கம்பியால் தனது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தோஷ் பஹா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின் நிரூ கைது செய்யப்பட்ட பின் நடத்தப்பட்ட விசாரணையில் தனது தாயை தான் கொன்றதை அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |