தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் தற்போது உருவாகும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் இரண்டு திரைப்படங்கள் உருவாகிறது. ஒன்று கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படமும் மற்றொன்று ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
The tale starts now 🤓@dhanushkraja @theVcreations @thisisysr @Arvindkrsna pic.twitter.com/xWF0EqCaQp
— selvaraghavan (@selvaraghavan) January 12, 2021
இந்நிலையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எஸ் 12’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரவு 7: 10 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாவதாக அறிவித்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் , யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்புக்காக தனுஷ்-செல்வராகவன் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.