நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். வெற்றிக்கு முக்கிய காரணமான விராட் கோலி 52 பந்துகளில் 72* ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர் ) அடித்து விளாசினார். ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்த போட்டியின் போது ஷிகர் தவான் ஷம்ஸி வீசிய 12 வது ஓவரில் 3 பந்தில் சிக்ஸர் அடித்தார். அதற்கு அடுத்த பந்தை நேராக வேகமாக அடித்தார். கிட்டத்தட்ட அது பவுண்டரி சென்றுவிடும் என்று விராட் கோலியும், ஷிகர் தவானும் நினைத்தனர் ஆனால்டேவிட் மில்லர் வேகமாக வந்து சீறி பாய்ந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதனை பார்த்த கோலி வாயை பிளந்து பார்த்தார். தவனுக்கு என்ன நடந்தது யென்ற புரியவில்லை. தவான் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விராட் கோலியும் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இரண்டு கேட்ச்சில் எது பெட்டர் என்று கமெண்ட் செய்யவும்.