Categories
டென்னிஸ் விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: குரேஷியாவை வீழ்த்தி …. சாம்பியன் பட்டம் வென்றது ரஷ்யா ….!!!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்ய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது .

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த மாதம் 25-ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. போட்டியில் மொத்தம் 18 நாடுகள் பங்கு பெற்றன. இதில்மாட்ரிட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்யா – குரேசியா அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் குரேஷியாவை  வீழ்த்திய  ரஷ்ய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . இதில் 2-வது ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்ய வீரர்  டேனில் மெட்வதேவ்  7-6 (9-7), 6-2 என்ற நேர் செட் கணக்கில் குரேஷியாவை சேர்ந்த சிலிச்சை வீழ்த்தினார்.

இதன்மூலம் ரஷ்ய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அணி மீண்டும் டேவிஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது .அதோடு   3-வது முறையாக ரஷ்ய அணி கோப்பையை வென்றுள்ளது .இதற்கு முன்பாக 2002 மற்றும் 2006 ஆண்டுகளில்  கோப்பையை வென்றுள்ளது . இதனிடையே டேவிஸ் கோப்பையை  அதிகபட்சமாக அமெரிக்கா 32 முறை வென்றுள்ளது.

Categories

Tech |