Categories
சினிமா தமிழ் சினிமா

டக்கராக வெளியான ”டான்” ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்……. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்…..!!!!

‘டான்’ படத்தின் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது.

இதனையடுத்து, இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”டான்”. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்காமோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, சூரி, காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

வைரலாகும் டான் படத்தின் டக்கரான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ! - Tamil Movie Cinema News

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

Categories

Tech |