Categories
சினிமா தமிழ் சினிமா

“DAY-58 “பிஞ்சிலையே பழுத்த கவின்… மலரும் நினைவுகளில் வெளிவந்த உண்மை..!!

5 வகுப்பு படிக்கும் பொழுதே ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக கவின் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் நாளான இன்று,  குழந்தைகளைப் போல நடிக்க வேண்டும் என்ற டாஸ்க்கை  தொடர்ந்து,

Image result for kavin

தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் அனைவருக்கும் வழங்கினார். அதன்படி தர்ஷன், சாண்டி, முகின் உள்ளிட்டோர் காமெடியாக தங்களது பள்ளி நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து கவின் தனது பள்ளி பருவ நிகழ்வுகளை பகிரும் பொழுது, சிறுவயதிலேயே  பொறுக்கி போல் சுற்றிக் கொண்டு இருந்ததாகவும், ஐந்தாம் வகுப்பிலேயே ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் அளித்ததாகவும் தெரிவித்தார். அவரது பேச்சை கேட்டவுடன் சக போட்டியாளர்கள் அவரை கலாய்த்தனர்.

Categories

Tech |