உலகில் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலர் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.