சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் மிக வெற்றிகரமாக ஒரு இந்தி திணிப்பு போராட்டத்தை நாங்கள் நடத்திக் காட்டினோம். பாஜகவும் சேர்ந்து நடத்தினார்கள். நேத்து அவங்களும் போராட்டம் நடத்திருக்காங்க. கேட்டா நாம….
ஆங்கிலத்தை திணிக்கிறோமா ? இப்படி நாம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமா ஏதாவது ஒன்னு சொல்லிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட பாஜக தலைவர் பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று சொல்லிவிட்டார். குரங்கு மாதிரி என் பின்னாடியே சுத்துறீங்க அப்படின்னு சொல்றாரு. அந்த அளவுக்கு கேவலமான ஒரு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அதிமுக.
அவங்க கட்சி இருக்கா ? இல்லையான்னு தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏனென்றால் பாஜக கைல தான் அதிமுகவின் குடுமி இருக்கு. இந்திய ஒன்றிய அரசை தட்டி கேட்கின்ற… தமிழ்நாட்டிலேயே மாநில உரிமைகள் எல்லாம் பறிக்கப்படும் போது அதற்காக குரல் கூட கூடிய ஒரே தலைவர் நம்முடைய தமிழக முதல்வர் தலைவர் அவர்கள் தான். அவர்களுக்கு பாராட்டாக தான் இந்த விழா இங்கு சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
உங்களைப்போல நானும் வந்திருக்கக்கூடிய அத்தனை பேச்சாளர்களுடைய பேச்சை கேட்பதற்காக நானும் அவர்களோடு ஆவலோடு காத்திருக்கிறேன். நீங்கள் அத்தனை பேரும் நிகழ்ச்சி முடியும் வரை அண்ணன் தயாநிதி மாறன் உட்பட.. ஏனென்றால் அவர் வரும்போது என்னை சொல்லி கூப்பிட்டு வந்தாரு. பேசி முடிச்சுட்டு நீ கெளம்பிரு, உன் பின்னாடியே வந்ததுன்னு சொன்னாரு. எனவே அத்தனை பேரோட பேச்சையும் கேட்கணும். எப்படியும் சேகர்பாபு அண்ணன் விடமாட்டார் என கலகலப்பாக பேசினார்.