Categories
அரசியல் மாநில செய்திகள்

“பகல் கனவு பலிக்காது”…. பொம்மை முதல்வரின் ஆட்சி விரைவில் வீழும்…. மெகா கூட்டணியில் வெற்றி….. EPS அதிரடி….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் அதிமுக கட்சியின் 51-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் 31 வருடங்கள் ஆண்ட திமுக கட்சி பிளவுபட்டுவிட்டது என ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் எப்படியாவது அதிமுக கட்சியை முடக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. அதிமுக கட்சியினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எல்லாம் தாண்டி நாங்கள் ஆட்சி அமைப்போம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும்.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கண்டிப்பாக அதிமுக கூட்டணி அமைத்து வெற்றி பெறும். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சு என்பதே கிடையாது. அதிமுகவை வீழ்த்தி விடலாம் என ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவருடைய கனவு ஒருபோதும் பலிக்காது. திறமையற்ற பொம்மை முதல்வர் தான் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.

அதிமுக கட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார் ஸ்டாலின். யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது? என்ற கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அதிமுக கட்சியானது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது பாமகவையும் சேர்த்து தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க போவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |