Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS KKR : டெல்லியை பந்தாடியது கொல்கத்தா ….! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ….!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலா 39 ரன்கள் குவித்தனர் .இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 128 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது .தொடக்க வீரர்களாக  சுப்மன் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதில் வெங்கடேஷ் ஐயர்  14 ரன்னும் , சுப்மன் கில் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய மோர்கன் , தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர் .இறுதியாக கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது .இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை தக்க வைத்துள்ளது.

Categories

Tech |