Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RR : புரட்டி போட்ட ”டெல்லி”…! நடுங்கி தோற்ற ”ராஜஸ்தான்”….!!!

ஐபில் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். இதில் தவான் 8 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து பிரித்வி ஷா 10 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 23 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்துள்ளது .

இதில் ராஜஸ்தான் தரப்பில் சேத்தன் சகாரியா, முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.இதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிவிங்ஸ்டன் ஒரு ரன் ,ஜெய்ஸ்வால் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் , டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்தார் .இதில் மில்லர் 7 ரன்னில் ஆட்டம் இழக்க ,அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 70 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது .இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Categories

Tech |