பிரபல சேனலான சன் டிவியை TRB -யில் இரண்டாம் இடத்திற்கு தள்ளி டிடி சேனல் முதலிடத்தை பிடித்துள்ளது
சன் டிவி தான் இந்திய தொலைக்காட்சிகளில் எப்போதும் நம்பர் 1 இடத்தில இருக்கக்கூடிய ஒன்று. அதிலும் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கும். இந்நிலையில் சன் தொலைக்காட்சி கடந்த வாரம் இந்தியளவில் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இது கூடஆச்சர்யம் இல்லை.
முதலிடத்தை பிடித்திருப்பது டிடி நேஷ்னல், அதுவே பலரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. கேபிள் டிவி வந்த பின்னர் யாரும் டிடியை விரும்பி பார்ப்பது இல்லை. இருந்தும், இந்த முறை முதலிடத்திற்கு வந்தது பலருக்கும் ஆச்சரியம் தான், மேலும், டிடியில் செம்ம ஹிட்டான சக்திமான் சீரியலை மீண்டும் ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர்.