பிரபல தொகுப்பாளினி டிடி ராதா வேடம் அணிந்துள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் சிறுவயதில் சிலபல சீரியல்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் தொகுப்பாளர் என்று கூறினாலே முதலில் ஞாபகம் வரும் பெயர் டிடி ஆகத்தான் இருக்கும்.
ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலகலப்பாக நடைபெறும்.ஆகையால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென்றே பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் ராதா வேடமணிந்து போட்டோ எடுத்து வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் ராதா வேடம் அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது பாலிவுட் திரையுலகில் வெளியான ஜோதா அக்பர் படத்தில் வரும் நடிகை ஐஸ்வர்யா ராயை போலவே டிடி இருக்கிறார் என்று பலரும் சொல்லி வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா ராயை போலிருக்கும் டிடியின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.