Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோட்டாறுவிளை பகுதியில் பால்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால்குமார் மீன்பிடிப்பதற்காக மறுகால் ஓடைப்பக்கம் சென்றுள்ளார். அப்போது பால்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அதிக நேரமாகியும் பால்குமார் வராததால் குடும்பத்தினர் அவரை தேடி பார்த்துள்ளனர்.

அதன்பின் குடும்பத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கி சடலமாக கிடந்த பால்குமாரின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குரும்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |