Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செல்போன் எடுக்காததால் சந்தேகமடைந்த தந்தை…. சோளக்காட்டில் நேர்ந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பஞ்சப்பட்டி பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு பாலசுப்ரமணியம் என்ற மகனும் கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சோளக்காட்டுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பாலசுப்ரமணியன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அப்போது பக்கத்து தோட்டத்தில் இருந்த தந்தை கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் எடுக்காததால் கிருஷ்ணசாமியும் அவரது மகள் கலைச்செல்வியும் சந்தேகம் அடைந்து சோளக்காட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு பாலசுப்ரமணியம் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமியும் அவரது மகள் கலைசெல்வியும் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அலங்கியம் காவல்நிலையத்தில் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாலசுப்ரமணியத்தின் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |