Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது போதையில்…. அதிக மாத்திரைகளை சாப்பிட்ட வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் ராஜசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆடி கொடை விழாவிற்கு சென்னையிலிருந்து குலசேகரன்பட்டினம் வந்த ராஜசூர்யா தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 4-ஆம் தேதி ராஜசூர்யா குடிபோதையில் வீட்டிலிருந்த மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயக்கமடைந்தார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து ராஜசூர்யாவை உடனடியாக மீட்டு உடன்குடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக ராஜசூர்யாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |