Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பழச்சாறு குடித்த மாணவி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பழச்சாறு குடித்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி லட்சுமியும், சாந்தியும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு பார்சல் வாங்கி வந்து வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மகாலிங்கம் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமிபிரியாவின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |