Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பச்சிளம் குழந்தையை கவ்விய தெருநாய்… நெஞ்சை உலுக்கும் காட்சி… கடலூரில் பரபரப்பு…!!!

தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி கொண்டு வந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி அருகில், ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை தெருநாய் அதன் வாயில் கவ்விக் கொண்டு ஓடி வந்தது. அந்த நாயின் பின்னால் மேலும் மூன்று தெரு நாய்கள் வந்தன. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த குழந்தையை மீட்பதற்காக கற்களைக் கொண்டு அந்த தெரு நாய்களை அடித்தனர். இதனால் அங்குள்ள ஒரு முட்புதருக்குள் குழந்தையை போட்டுவிட்டு அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. இதனையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு ஆண் குழந்தை இறந்த நிலையில் தொப்புள் கொடியுடன் அங்கு கிடந்தது.

அதோடு அந்த குழந்தையின் இடதுகையை தெருநாய்கள் இணைந்து கடித்துத் தின்றதற்கான அடையாளமும் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இக்குழந்தையை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்ட அந்த தாயார் யார் என்ற ஆதங்கத்துடன் வினவி கொண்டிருந்தனர். அதன் பின் இத்தகவலை திட்டகுடி போலீசாருக்கு தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் கருக்கலைப்பு என்பது மிகவும் சர்வ சாதாரணமாக திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை பற்றி அதிகாரிகள் அறிந்தும் அதனை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். அந்த மருத்துவமனையில்  கருக்கலைப்பின் போது எடுக்கப்படும் குழந்தைகளை அங்குள்ள வெள்ளாற்றில் புதைத்து விடுகின்றனர். அப்படி புதைக்கப்பட்ட குழந்தையைத்தான் தெரு நாய்கள் ஒன்றுசேர்ந்து தூக்கி இருக்கலாம் என கருதுகின்றனர்.

எனவே இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து குழந்தைகளுக்கு இதுபோன்ற நிலை ஏற்படாமல் அதிகாரிகள் தடுக்க வேண்டும் என போலீசாருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த குழந்தையின் தாயார் யார் என்றும், இந்த குழந்தை எப்படி இறந்தது என்றும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |