சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஒரு நபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள Tscharnergut என்ற பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சில மாணவர்கள் ஒரு நபரின் உடல் கிடப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து அந்த பள்ளியின் பாதி பகுதியை காவல்துறையினர் முடக்கி வைத்தனர். அதன்பின்பு, மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பி சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மாணவர்களின் பெற்றோர், இது குறித்த சந்தேகங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்கலாம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளி வளாகத்தில் கண்டறியப்பட்ட உடலை மாணவர்கள் சிலர் நேரில் பார்த்திருப்பார்கள்.
எனவே அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது. இதனால் அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பள்ளியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பிற தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.