கொடூரமாக கொல்லப்பட்டு அழுகிய நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கிலி கிராமத்தில் இருக்கும் ஒரு குட்டையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த வாலிபரின் முகம் சிதைக்கப்பட்டதோடு, கால்களை தீ வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அவரது கையில் ஹிந்தியில் பச்சை குத்தி இருந்ததால் அவர் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபராக இருக்கலாம் என காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரின் விபரம் குறித்தும், அவரை கொலை செய்து குட்டையில் வீசிய மர்ம நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.