கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரணிப்பட்டி கிராமத்தில் இருக்கும் குளக்கரை பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் பிச்சைமணி என்பதும், அவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை கழுத்தறுத்து கொலை செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.