பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவிகளுடன் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட மக்களுக்கு போடப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. உலகம் முழுவதும் இதுவரையிலும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உருமாறிய பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது பல நாடுகளில் மிரட்டி வருகிறது.
இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் கடுமையான சோகத்திற்கும், தனிமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆவியுடன் பேசுபவர்களின் உதவியுடன், கொரோனவள் இறந்தவர்களின் உறவினர்கள் பேசும் நிகழ்வு இங்கிலாந்தில் அதிகரித்து வருகின்றது. இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் என்பவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜிம் உயிரிழந்துள்ளார் .தன்னுடைய கணவரின் இழப்பை தாங்க முடியாமல் ஜிங் மனைவி தனிமையில் இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் நண்பர் ஒருவர் மூலம் ஆவிகளுடன் பேசுவது குறித்து விசாரித்துள்ளார். இதையடுத்து ஆவிகளுடன் பேசும் ஜூன் ஃபீல்ட் என்பவரை சந்தித்து, தனது கணவர் பயத்தில் இருக்கிறாரா? என்று கேட்டுள்ளார். முதலில் உங்களுடைய கணவர் பயத்தில் இருந்தார். தற்போது அவர் ரிலாக்சாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அவர் சற்று நிம்மதி அடைந்துள்ளார். இதையடுத்து ஜிம் மனைவி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயன்று வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஆவியுடன் தொடர்பு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் மூடநம்பிக்கையாக இருந்தாலும் அன்பானவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.