Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த விவசாயிகள்…. குடும்பத்தினருக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு…!!

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்  தொடர்ந்து வருகின்றனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். கடும் குளிரையும் போராட்டம் நடந்து வருகின்றது. இந்த போராட்டத்தின் போது 76 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து போராட்டத்தின்போது உயிரிழந்த ஒவ்வொரு விவசாயிகளின் குடும்ப உறுப்பினருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். டெல்லி போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த பஞ்சாப் விவசாயிகளுக்காக அம்மாநில முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |