Categories
உலக செய்திகள்

உயிரிழந்த சிறுமி…. இறுதிச் சடங்கில் உறவினர்களுக்கு அதிர்ச்சி… 60 நிமிடத்தில் நேர்ந்த சோகம்….!!

இந்தோனேசியாவில் இறந்த 12 வயது சிறுமி மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என்ற 12 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை ஆறு மணி அளவில் சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமிக்கு இறுதி சடங்கு செய்ய குடும்பத்தினர் சடலத்தை எடுத்து சென்றனர். இறுதிசடங்கின் ஒரு பகுதியாக சிறுமியின் சடலத்தை தண்ணீரை கொண்டு குளிக்கவைத்தனர்.

அந்த சமயத்தில் சிறுமி கண்விழித்ததோடு அவரின் இதயமும் துடித்தது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமியை தூக்கி சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் மீண்டும் ஒரு மணி நேரத்தில் அந்த சிறுமி உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் “இது ஹைபர்கோமியவால் நிகழ்ந்தது. அவரது ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது. இதுபோன்று நிகழும்” என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்

 

Categories

Tech |