அமெரிக்காவில் கடந்த 2018ம் ஆண்டு இறந்து போன தாயிடமிருந்து மகளுக்கு சமீபத்தில் வாழ்த்து அட்டை வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் யங்ஸ்டன் பகுதியை சேர்ந்த கேத்தரினா ஜோன்ஸ் சமீபத்தில் தன் வீட்டில் உள்ள தபால் வரும் பாக்சை திறந்து பார்த்துள்ளார். அதில் ஒரு தபால் வந்திருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு இறந்து போன அவரது தாயிடம் இருந்து வந்திருந்தது. தபாலுக்குள் கேத்ரினாவின் பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டை இருந்தது. அதில் அவரது தாயாரின் கையெழுத்துலேயே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து எழுதப்பட்டிருந்தது.
இது எப்படி சாத்தியமாகும் என்று பார்த்தபோது இந்த தபால் ஜூன் 20, 2015 ஆம் ஆண்டு முத்திரை குத்தப்பட்டு இருந்தது. அதன் பின் தான் அவருக்கு புரிந்தது. தனது தாய் 2015ஆம் ஆண்டில் தனது பிறந்தநாளுக்கு அனுப்பிவைத்த அட்டை தான் தற்போது எனக்கு கிடைத்துள்ளது. மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு பிறந்த நாளின் போது தாய் தனக்கு பிறந்த நாள் அட்டை அனுப்பி வைத்தாரா? என்று நினைவு கூர்ந்துள்ளார்.
அப்போதுதான் அந்த அட்டை சற்று தாமதமாக வரலாம் என்று நினைத்துள்ளார். வாழ்த்து அட்டை இவ்வளவு தாமதம் ஆகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. 2018 ஆம் ஆண்டு மறைந்த தனது தாயை நினைவு படுத்தும் வகையில் அவர் எழுதிய பிறந்த நாள் குறிப்பு தற்போது வந்துள்ளது, அவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல தபால்கள் மிக தாமதமாக வருவது என்பது உலகின் பல இடங்களில் நடந்து வருகின்றது.