இறந்த உறவினரின் உடலுக்கு பதிலாக மற்றொரு உடலை அடையாளம் தெரியாமல் தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் உறவினர் ஒருவர் உயிரிழந்த சவப்பெட்டியில் அவரது உடல் தகனத்திற்கு போவதை கண்ணீருடன் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியது அவரது குடும்பம். மறுநாள் குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசியவர்கள் உங்கள் உறவினரின் உடல் சவக்கிடங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்ட அந்த குடும்பம் அடக்கம் செய்யப்பட்டது யாருடைய உடல் என திகைத்துப் போனது. அதன் பிறகு இறுதிச்சடங்கு மையத்திற்கு பதறியடித்துக் கொண்டு சென்று தாங்கள் தவறுதலாக தகனம் செய்த உடலின் உடலுக்கு உரியவரின் உறவினர்களை அழைத்து தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.
கொரோனாவால் இறந்தவரின் உடல் என்பதால் தகனம் செய்த வரும் முகத்தை பார்க்கவில்லை உடல் பையின் உள்ளே இருந்ததால் உறவினர்களும் அவரது முகத்தை சரியாக பார்க்கவில்லை உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் சரியாக ஒப்படைக்க வேண்டியது மருத்துவமனையின் கடமை என இறுதிச்சடங்கு மையம் குற்றம்சாட்டியது. அதற்கு மருத்துவமனை மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.