இறந்த தாயின் வீட்டில் ஃப்ரீஸரில் பதப்படுத்தப்பட்ட சடலம் இருந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நியூயார்க்கில் வசித்து வந்த தனது தாய் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது அடுக்குமாடி வீட்டிற்கு தாயின் உடைமைகளையும் பொருட்களையும் எடுக்க சென்ற மகன் வீட்டிலிருந்த ஃப்ரீஸர் திறந்து அதிர்ச்சிக்குள்ளாகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர ஃப்ரீஸரில் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் ஃப்ரீஸரில் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி, அந்த சடலம் 10 வருடத்திற்கு மேல் அங்கு இருந்திருக்கலாம் என கூறியுள்ளனர். இதுவரை ஃப்ரீசரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சடலம் பெண்ணா என்பது தெரியவரவில்லை.
அக்கம்பக்கத்தினர் கூறும்பொழுது அந்தப் பெண் மிகவும் சாந்தமானவர். அவரது வீட்டில் ஒரு சடலம் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே இதில் இருக்கும் மர்மங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது