Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனா: சீனாவுக்குள் நடந்த அதிசயம்! பச்சிளம் குழந்தையால் ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள்

கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான  பிறந்த பச்சிளம்  குழந்தை 17 நாட்களில் எந்த ஒரு சிகிச்சையும் இன்றி முழுவதும் குணமாகி உள்ளது. மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 5 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.

தாய்க்கு  கொரானா வைரஸ் தொற்று இருந்த நிலையில் குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் குழந்தைக்கு   பரிசோதனை செய்ததில் தாயின்  மூலமாக குழந்தைக்கும் கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சியோசியோ என பெயர்வைக்கப்பட்ட அந்த குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்  இருந்து வந்தது. சியோசியோ பச்சிளம் குழந்தை என்ற காரணத்தாலும்  மேலும் கொரானாவின் ஆரம்ப நிலை என்பதால் எந்த வித சிகிச்சையும் கொடுக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தை சியோசியோ வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து உள்ளதால்  கடந்த 21 ஆம் தேதி  மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  வுகான் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |