ஆஸ்திரேலியாவில் சதை உண்ணும் கொடிய நோய் பரவி வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் புருலி புண் என்ற நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் சரும புண்களுக்கு வழிவகுக்கும். இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த நோய் மனிதர்களுக்கு எவ்வாறு பரவுகிறது என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் இந்த நோய் தொடர்பாக தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியரான பிரிட் சுட்டன் சுகாதாரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு பாக்டீரியாவால் இந்த தொற்று ஏற்படுகிறது. இது சருமத்தில் புண்களை ஏற்படுத்தும். இது சிறிய பூச்சி கடித்தது போல இருக்கும். ஆனால் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய புண்களாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.