100% இருக்கை குறித்து டாக்டர் ஒருவர் மன வேதனையுடன் எழுதியுள்ள கடிதம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாஸ்டர் படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாக இருக்க நிலையில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் டாக்டர் அரவிந்த் சீனிவாசன் என்பவர் வேதனையுடன் எழுதிய கடிதம் ஒன்று இணையதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” டியர் நடிகர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. என்று ஆரம்பித்துள்ளார். பின்னர் நான் களைப்பாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் களைப்பாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் களைப்பாக இருக்கிறார்கள்.
சுகாதாரத் துறை ஊழியர்களும் களைப்பாக இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளும் களைப்பாக இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் களைப்பாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சோதனையான காலத்தில் கொரோனாவை தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி நான் சொல்லவில்லை. ஆனால் பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் சண்டை காட்சிகளில் நடிப்பது இல்லை. ஹீரோக்களும் இல்லை. ஆனால் எங்களுக்கு மூச்சுவிட நேரம் வேண்டும்.
சிலரின் சுயநலத்திற்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை என்று அரவிந்து தெரிவித்துள்ளார் மேலும் சிலரின் சுயநலத்திற்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை. ஹீரோக்கள் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவதில்லை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம்முடைய வாழ்க்கையில் கவனம் செலுத்தி இந்த பயங்கரமான சோதனைக் காலத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வர முயற்சிக்கலாம்.
அணைந்து கொண்டிருக்கும் தீயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி தூண்டி விட வேண்டாம். இன்னும் முழுதாக அணைந்து முடியவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று நான் என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று அரவிந்த் கூறியுள்ளார். இந்த போஸ்ட்டை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “டாக்டர்களுக்கு சினிமாத்துறை என்ன நியாயம் சொல்ல போகிறது. பணத்துக்காக உயிரை வியாபாரம் செய்வது சினிமாத்துறையில் அலட்சியம். இதனால் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.