திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே 7 வருடங்களுக்கு முன் மூடப்படாத பள்ளத்தால் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கமல கண்ணன் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் 2வது குழந்தையான 6 வயதான மோகன்ராஜ் அதே பகுதியில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். 7 வருடங்களுக்கு முன் கமல கண்ணன் வீட்டுக்கு பக்கத்தில் வீடு கட்டியவர் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக பள்ளம் தோண்டினார். ஆனால் தோண்டிய பள்ளத்தை மூடவே இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் கனமழையால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மோகன் வெளியே விளையாட சென்ற போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தண்ணீர் தேங்கிய கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்தார்.அவர் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. சிறுது நேரம் கழித்து மோகன்ராஜை காணவில்லை என்று தாய் சங்கீதா தேடிக்கொண்டிருந்த போது, கழிவுநீர் தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மோகன்ராஜை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் சங்கீதா. பின்,
சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மோகன்ராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் உயிர் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் கதறி அழுதனர். பின் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட வழக்கு பதிவு செய்த அதிககாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.