டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வயலுக்கு டிராக்டரில் புறப்பட்ட குமார் வயலுக்கு வரப்பு ஓரமாக சென்று கொண்டிருந்த போது திடீரென டிராக்டர் கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.