தொழிலாளி தென்னந்தோப்பில் பிணமாக கிடந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் கோட்டைச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகளும், நாகம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். கோட்டைசாமி நேற்று கடைக்கு டீ குடிக்க செல்வதாக நாகம்மாளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி பிணமாக கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நாகம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் கோட்டைச்சாமி மூளை சிதறி, கைகள் உடைந்த நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வருசநாடு காவல்துறையினர் கோட்டைச்சாமியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வருசநாடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.