நாகையில் மின்பாதை ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வந்தார். இவர் மின்பாதை ஆய்வாளராக கீழ்வேளூர் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் தங்கராசு மின் நிலையத்தில் வேலையில் இருந்துள்ளார். அப்போது திடீரென தங்கராசு வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.
மயங்கி விழுந்த தங்கராசுவை அங்கு உடன் இருந்த மின் தொழிலாளர்கள் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் தொடர்ந்து மயக்கநிலையிலேயே இருந்ததால் அவரை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இந்த மரணம் குறித்து கீழ்வேளூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.