Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற இசைக்கலைஞர்கள்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இசைக் கலைஞர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரீஷ் என்ற மகன் இருந்தார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் என்பவருக்கு வசந்த் என்ற மகன் இருந்தார். வசந்த், ஹரிஷ் ஆகிய இருவரும் பேண்ட் இசைக்குழுவில் இசைக் கலைஞர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று நிலக்கோட்டை பகுதிக்கு அருகே உள்ள சிவஞானபுரத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹரிஷ், வசந்த உட்பட 17 பேர் கொண்ட இசைக்குழுவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

பின் நிகழ்ச்சி முடிந்ததும் நிலக்கோட்டை அருகே உள்ள வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு ஹரிஷ், வசந்த் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் மூழ்கி தத்தளித்தனர். இதனை கண்ட மற்ற இசைக்குழுவினர் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி அதற்குள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் ஹரிஷ், வசந்த் இருவரின் உடலையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |