நெல்லையில் சிறுவன் ஆற்றினுள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் 16 வயதாகின்ற செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 30ஆம் நாளன்று அம்பையிலிருக்கும் தாமிரபரணி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்றார். அப்போது செல்வம் சற்றும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.