தேனியில் பெண் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரரான கணேசன் என்பவரும், அவருடைய மனைவியான சித்ரா என்பவரும் வசித்துவந்தனர். இந்நிலையில் தம்பதியர் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனையின் காரணத்தால் சில வாரங்களாகவே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த சித்ரா தேனி மாவட்டத்திலிருக்கும் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய கணவருடன் நடந்த தகராறின் காரணத்தால் மனமுடைந்த சித்ரா வீட்டில் எவருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.