நெல்லையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கூலித்தொழிலாளியான தங்க செல்வம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் தங்க செல்வம் கடந்த சில தினங்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். இதில் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்று தங்க செல்வத்தினுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.