Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்டென்று தாக்கிய மின்னல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டை பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்ஜினியரிங் கல்லூரி பயிலும் மாணவரான ஆண்டனி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பர்களுடன் அதே பகுதியிலிருக்கும் பள்ளிக் கட்டிடத்தினுடைய மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதில் திடீரென்று நண்பர்களுடன் விளையாடிய ஆண்டனியை மின்னல் தாக்கியுள்ளது.

இதில் ஆண்டனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |