நெல்லையில் இளம்பெண் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 23 வயதாகின்ற ஜானகி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ஜானகி அவருடைய வீட்டிலிருக்கும் கழிவறைக்கு சென்றார். அப்போது அவர் கழிவறைக்குள் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ஜானகியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜானகி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.