Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் 3 பேர் பலி… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர், நாயக்கர் புதுதெருவை சேர்ந்த 50 வயது பெண், பள்ளப்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவர் என மூன்று பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |