Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு கழிவறைக்குள்…… “விஷவாயு” ஒருவர் மரணம்….. 2 பேர் தீவிர சிகிச்சை….!!

கோவையில் கழிவறைக்குள் பரவிக் கிடந்த விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்தவர்களில் ஒருவர் மரணிக்க, 2பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோவை பீளமேடு பகுதியில் ஹட்கோ பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பாலாஜி, முரளி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில், ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறை முழுவதும் விஷவாயு நிரம்பி இருந்ததால், அதை சுவாசித்த அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். இதையடுத்து தந்தையை தேடிப்பார்க்க கழிவறைக்கு பாலாஜி சென்றபோது, அவரும் விஷ வாயுவால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரது தம்பி முரளி கழிவறை அருகே சென்றபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறிந்த பானுமதி அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். மயங்கி கிடந்த அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு உயிரிழந்தவர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், சில நாட்களுக்கு முன்பு கழிவறை சுத்தம் செய்யப் பட்டதாகவும், கழிவறை அருகிலுள்ள ஜெனரேட்டர் ரிப்பேர் ஆனதன் காரணமாகத்தான் இந்த விஷவாயு தாக்குதல் நடைபெற்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |