நெல்லையில் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அஜித் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் கல்வெட்டான் குழிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் மீனைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக குழிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அஜித்தின் உடலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அஜித் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.