தேனியில் 2 பைக்குகள் எதிரெதிரே மோதியதால் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ராணுவ வீரரான ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராமராஜ் தற்போது விடுமுறைக்காக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது அங்கு இவருடைய மோட்டார் சைக்கிளுக்கு எதிராக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ராமராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.