Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

நெல்லையில் லோடு ஆட்டோ-கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 60 வயதாகின்ற முத்தையா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய வீட்டிலேயே குளிர்பானங்களை தயாரித்து அதனை விற்பனை செய்வதற்காக லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கீழநத்தம் நான்கு வழி ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் சற்றும் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முத்தையாவையும் லோடு ஆட்டோ டிரைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு முத்தையாவுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |