சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாலிபர் ஒருவர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோச்சடை கிராமத்தில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி ( 22 ) என்ற மகன் இருந்தார் . இவர் சம்பவத்தன்று தங்களுக்கு சொந்தமான புளியமரத்தில் பழம் பறிப்பதற்காக தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தங்களது மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மரத்திலிருந்து கிளை முறிந்ததில் அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.
அதில் மிக மோசமாக காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.