திருநெல்வேலியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஆனந்த இசக்கியப்பன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வேப்பங்குளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இவரது மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.