நெல்லையில் வாலிபர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பெருமாள் புரத்தில் லாரி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த பாஸ்கர் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மன உளைச்சலடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு விஷத்தினை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.