Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…? பிணத்துடன் பயணம் செய்த பயணிகள்…. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த குடும்பத்தினர்கள்….!!

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உயிரிழந்த ஒருவருடன் சுமார் 6 மணி நேரம் சகபயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்திலிருக்கும் சூரச்சில் சுமார் 60 வயது நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த நபர் உயிரிழந்ததை கூட கவனிக்காத சக பயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பிணத்துடன் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்துள்ளார்கள்.

இது குறித்து தகவலறிந்த அவருடைய குடும்பத்தினர்கள் கூறியதாவது, இந்த உலகில் மனிதர்கள் தங்களை மட்டுமே மையப்படுத்தி வாழ்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள். மேலும் மற்றவர்களுக்கும், தங்களை சுற்றியும் என்ன நடக்கிறது என்று கூட அறியாமல் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |